Others

கேரள ஐகோர்ட்டு–சிறார்கள் குறித்து கவலை…

Kerala High Court Recommends Lowering Juvenile Age Threshold To Sixteen  Years Following Recent Fatal Accidents - Supreme Today AIகேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நெடும்பச்சேரி என்ற பகுதியில், கடந்த அக்டோபரில் சுஹைல் (வயது 19) என்ற வாலிபர், மதுபோதையில்ஓட்டிச்சென்ற கார், ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், 2 மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.விசாரணையில்,சம்பவத்தன்று3பார்களில்இவர்மதுஅருந்தியதும்தெரியவந்தது.கேரளத்தில்23வயதுக்குகுறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என சட்டம் உள்ளது. இதனையடுத்து, 19 வயது வாலிபருக்கு மது விற்பனை செய்த 3 பார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் 23 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்வதையும், பரிமாறுவதையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கொல்லம் பகுதியை சேர்ந்தவினோத் விக்ரமன் என்பவர் கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.இதை விசாரித்த நீதிபதி பதருதீன் இடைக்கால உத்தரவை வெளியிட்டார். அப்போது அவர் கூறும்போது18 வயதுக்கு குறைவானசிறார்கள்கூட மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டி உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துகளில் ஈடுபடுவது கவலையளிக்கிறது.சிறார் குற்றவாளிகளாக கருதப்படுவதற்கான வயது வரம்பை தற்போதுள்ள 18-ல்இருந்து16ஆககுறைப்பதுகுறித்து ஆலோசிக்க வேண்டும். குழந்தைகள் 16 வயதை எட்டும்போதே போதிய மன முதிர்ச்சியை அடைந்து விடுவதாக தற்போதைய சூழ்நிலைகள்காட்டுகின்றன.எனவே,சிறார்குற்றவாளிகள் தொடர்பான சட்டங்களில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு வயது வரம்பை 16 ஆக குறைப்பது குறித்து சட்டமன்றங்கள் பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என கூறினாரஇதேபோன்று, கேரள அப்காரி சட்டத்தின் பிரிவுகள் அமல்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை சமர்ப்பிக்கும்படி, கலால் துறை ஆணையாளருக்கும் உத்தரவிட்டார். இந்த வழக்கு மீண்டும் வருகிற24-ந்தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.

…

 

 

 

 

 

 

 

 

 

Related Articles

Back to top button
Close
Close