குழந்தைக்கு சத்து நிறைந்த கஞ்சி பவுடர் !
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி -1/4 கிலோ (250 கிராம்)
பொட்டு கடலை -1/4 கிலோ
சம்பா கோதுமை அல்லது பஞ்சாப் கோதுமை -1/4 கிலோ
சீரகம் – 1 தேக்கரண்டி
ஓமம் – 1 தேக்கரண்டி
செய்முறை:
முதல் தரம் வாய்ந்த பொருட்களை வாங்க வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் கல், தூசி நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
வெறும் கடையை வைத்து முதலில் அரிசி போட்டு மிதமான சூட்டில் வருத்து கொள்ளவும். அரிசி பொரிந்ததும், சம்பா கோதுமை சேர்த்து வறுக்கவும், அதன் பின் சீரகம் மற்றும் ஓமம் சேர்த்து ஒன்றாக வதக்கவும். கடைசியாக பொட்டுக்கடலை சேர்த்து லேசாக வருத்த பின் இறக்கி ஆற வைக்கவும்.
ஒன்றாக எல்லாவற்றையும் கலந்து, மாவு ஆலையில் கொடுத்து மாவு பதத்தில் அரைத்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
ஒரு கப் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒன்றரை டீஸ்பூன் கஞ்சி பவுடரை சேர்த்து கரைத்து கொள்ளவும். பின் அடுப்பில் லேசான சூட்டில் வைத்து கரண்டியில் கிளறி கொண்டே இருக்க வேண்டும். கஞ்சி அடர்த்தியான பதத்திற்கு வரும்போது 1/2 கப் (100ml ) பால் சேர்க்க வேண்டும். பின்னர் சர்க்கரை அல்லது வெள்ளம் சேர்த்து கிண்டி இறக்க வேண்டும்.
இந்த மாதிரியான புது வகையான உணவுகளை அறிமுகப்படுத்துவதற்கு முன் குழந்தை நல மருத்துவரை ஆலோசித்த பின்னரே கொடுக்க வேண்டும்.
4 மாதம் முழுமையாக முடிந்த குழந்தைக்கு இந்த கஞ்சியை அறிமுகப்படுத்தலாம்.
குழந்தைக்கு முதலில் கொடுக்கும் பொழுது குறைந்த அளவே கொடுக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக கஞ்சியின் அளவை அதிகரிக்கலாம்.
இது குழந்தைக்கு சத்து நிறைந்த உணவாக இருக்கும். இதனை தொடர்ந்து கொடுப்பதன் மூலன் குழந்தையின் உடல் புஷ்டியாகும்.