குழந்தைகளுக்கான அரிசி கஞ்சி !

குழந்தைகளுக்கு முதல் ஆறுமாதத்திற்கு தாய்ப்பாலே உகந்தது. முதலில் நாம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் உணவு அரிசி கஞ்சி. அதை எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சப்பாடு புழுங்கல் அரிசி – 1/2 கப்
ஓமம் ஒரு சிட்டிகை
செய்முறை
அரிசி நன்கு கழுவி, நீரை வடிகட்டி வைத்து கொள்ளவும். அரிசியை நிழலில் உலர வைக்கவும். வாணலியை மிதமான சூட்டில் வைத்து உலர்ந்த அரிசியை அதில் இட்டு வறுத்தெடுக்கவும். அதனுடன் ஓமம் சேர்த்து உடனே வாணலியை இறக்கி விட்டு ஆற விடவும்.
ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். நன்றாக மாவு பதத்தில் அரைத்துக்கொள்ளவும். இப்பொழுது அரிசி கஞ்சி பொடி தயார்.
2 டீஸ்பூன் அரிசி கஞ்சி பொடி மற்றும் 1 கப் தண்ணீர் எடுத்து கொண்டு நன்றாக கரைத்து கொள்ளவும். அதனை சிறிய தீயில் வைத்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கஞ்சி தொட்டு பார்த்து நன்றாக வெந்திருக்கும் நிலையில் அடுப்பினை அனைத்து விடலாம். மிதமான சூடு இருக்கும்போதே குழந்தைக்கு ஸ்பூனில் ஊட்ட வேண்டும். குழந்தை மிச்சம் வைத்தால் அதனை திரும்பவும் ஊட்ட வேண்டாம்.
முதல் ஒரு வாரத்திற்கு திரவ நிலையிலேயே கொடுக்க வேண்டும். குழந்தை அதனை விரும்பி சாப்பிட ஆரம்பித்தால் அல்லது எந்தவித பாதிப்பும் இல்லாமல் குழந்தை உடல் அதனை ஏற்றுக்கொண்டால் கஞ்சியை கெட்டி பதத்தில் கொடுக்கலாம்.