fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

மக்களவைத் தேர்தல் தேதி இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும்:தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு மூச்சுடன்  செய்துவருகிறது. தேர்தல் குறித்து அனைத்து கட்சிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.இதுமட்டுமின்றி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் அந்தந்த மாநிலங்களில் உள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு, 2014 மார்ச் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இப்போது 5 நாட்கள் கூடுதலாக ஆகியுள்ள நிலையில், இதுவரை தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஏப்ரல் மூன்றாம் வாரம் தொடங்கி மே இரண்டாம் வாரத்துக்குள் நாடு முழுவதும் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் தேர்தல் ஆணையம் உள்ளது. பல்வேறு பதற்றம் நிறைந்த தொகுதிகளைக் கொண்ட மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தலை நடத்த வேண்டிய தேவை உள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவு நாளுக்கு முன்பாக, வேட்பு மனுத்தாக்கல், பரிசீலனை, வாபஸ் பெற கெடு என பல நாட்கள் தேவைப்படுவதுடன், கட்சிகளின் பரப்புரைக்கும் ஒரு மாதம் வரை அளிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.எனவே, தேர்தல் இந்த வாரத்தின் முதலிரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி மக்களவைத் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு தேர்தல் ஆணையம், செய்தியாளர்களை சந்திக்கும் என்றும் அப்போது தேர்தல் தேதி உள்ளிட்ட கால அட்டவணை அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்களவை தேர்தல் தேதியுடன் ஒடிஷா, சிக்கிம் போன்ற பேரவைகளுக்கும், தமிழகத்தின் 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close