காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 4 பேர் பலி

காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 4 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள நாகலூ தெருவில் உள்ள முஸ்தாக் என்பவர் வீட்டில் தீபாவளி பண்டிகை நெருங்குவதை அடுத்து நாட்டு வெடிகளைத் தயாரித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக தீப்பற்றி வெடி வெடித்ததில் ஷாகீரா பானு, முஸ்தக் பாட்ஷா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தின்போது பக்கத்து வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில் மஸ்தான் என்பவரும் உயிரிழந்தார். இந்த விபத்தில் மூதாட்டி ஒருவர் பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஷாகீரா பானுவும் முஸ்தக் பாட்ஷாவும் அனுமதியின்றி வெடி தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.