fbpx
Tamil News

கறுப்பு பணம் குறித்த கேள்விக்கு பதிலளிக்க முடியாது – பிரதமர் அலுவலகம்

2014-ஆம் ஆண்டு முதல் 2017 ஆண்டு வரை மத்திய அமைச்சர்கள் மீது எழுந்த ஊழல் புகார்கள் மற்றும் அரசு அதன் மீது எடுத்த நடவடிக்கை ஆகியவற்றை தெரிவிக்க வேண்டுமென பிரதமர் அலுவலகத்திற்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சஞ்சிவ் சதுர்வேதி என்ற ஐ.எஃப்.எஸ் அதிகாரி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டுள்ள கேள்விகளை சுட்டிகாட்டியுள்ள தலைமை தகவல் ஆணையர் ராதா கிருஷ்ண மாதூர், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டு, இந்தியா கொண்டுவரப்பட்டுள்ள கறுப்பு பணத்தின் மதிப்பு எவ்வளவு என்று விளக்கமளிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டு மக்களின் வங்கி கணக்குகளில் எவ்வளவு தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கும்படி பிரதமர் அலுவலகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கறுப்பு பணத்தை மீட்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த தகவல்களை தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்த சஞ்சிவ் சதுர்வேதியின் கேள்விகளுக்கு, பிரதமர் அலுவலகம் இதுவரை பதில் அளிக்கவில்லை. மேலும் கறுப்பு பணம் குறித்த கேள்வி மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் அளிக்க முடியாது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது என்றும் மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close