கஜா புயலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, கஜா புயலாக மாறியது. இந்த கஜா புயல் நாகை -வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
தஞ்சை,நாகை,திருவாரூர் மாவட்டங்களில் கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. செல்போன் கோபுரங்களும் சரிந்தன.
சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து முடங்கியது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் பல ஊர்கள் இருளில் மூழ்கின .இதனால் மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளானார்கள். நாகை மாவட்டத்தில் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில்,கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஆண்கள் 26 பேர், பெண்கள் 17 பேர், குழந்தைகள் 3 பேர் என மொத்தம் 46 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.