இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார் என்று முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் சிறந்த தீர்ப்பு வெளியாகியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 20 தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில், நல்ல மற்றும் சிறந்த தீர்ப்பு வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை எதிர்கொள்ள ஏற்கெனவே தயாராக இருப்பதாகவும், 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
“நீதிமன்றத்தின் தீர்ப்பு பின்னடைவு அல்ல, இது ஒரு அனுபவம்” என்று தினகரன் பேசிய கருத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அப்படி என்ன அனுபவத்தை அவர் பெற்றார் என்று தெரியவில்லை என்று கூறிய அவர், அதிமுக உறுப்பினராகவே இல்லாத தினகரனின் கருத்து அதிமுகவுக்கு எப்படி பொருந்தும் என்றும் கேள்வி எழுப்பினார்.
தேர்தல் வந்தால் அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறுவோம்-ஓ.பி.எஸ்
அதிமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. துரோகிகளுக்கு சரியான பாடம் புகட்டப்பட்டது- சி.வி சண்முகம்