fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

அர்ச்சகர்கள் இயந்திரத்தனமாக பணியாற்றுகின்றனர் -சென்னை உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு !

கோவிலில் சிலைகள் காணாமல் போவதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் அர்ச்சகர்கள் இயந்திரத்தனமாக பணியாற்றுகிறார்களா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் புன்னைவனநாதர் சன்னதியில் லிங்கத்தை பூஜிக்கும் மயில் சிலை மாயம் என்று மனு அளிக்கப்பட்டது. வாயில் பூவுடன் கூடிய மயில் சிலைக்கு பதில், வாயில் பூவுடன் கூடிய பாம்பு இருக்கும் சிலை வைக்கப்பட்டது. சிலை மாறியது தொடர்பாக அறநிலையத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை காணமால் போனதாக தொடரப்பட்ட வழக்கில், சிலை மாறியிருப்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது அர்ச்சகரின் கடமை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அர்ச்சகர்கள் தெய்வீக பணிகளை சரியாக ஆற்ற வேண்டுமெனவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close