fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

சிறுமி பாலியல் வன்கொடுமை…தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை !!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் திமுக எம்.எல்.ஏ. ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ஜெய்ஷங்கருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதியன்று பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ-வும் திமுக பிரமுகருமான ராஜ்குமாரின் வீட்டிற்கு, வீட்டு வேலை செய்வதற்காக வந்துள்ளார்.

வந்த இரண்டே நாட்களில், தான் கடுமையாக சித்ரவதை செய்யப்படுவதாக, கேரளாவில் இருந்த தன் தாய் சுசீலாவை தொடர்புகொண்டு சிறுமி தெரிவித்துள்ளார். அதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் இருவரும் பெரம்பலூருக்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் சிறுமி பாலியல் ரீதியாக சித்ரவதை செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 2012 ஜூலை 6-ஆம் தேதி உயிரிழந்தார். சிறுமி கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கைகள் தெரிவித்த நிலையில், ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ஜெயசங்கர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திமுக முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ஜெய்ஷங்கர் இருவரும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அவரது மரணத்திற்கு காரணமாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ராஜ்குமார், கடந்த 2012-ஆம் ஆண்டு அவரது வீட்டில் வேலை செய்ய வந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக குற்றம் சட்டப்பட்டார். இவர் மீதும் இவரது நண்பர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ராஜ்குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் முடிவில் நீதிபதிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ராஜ்குமார் மற்றும் இவரது நண்பர் ஜெய்ஷங்கர் இருவரும் குற்றவாளிகள் எனவும், தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும் உத்தரவிட்டனர். சிறைதண்டனையுடன் ரூ.42,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் விடுவிக்கப்பட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close