fbpx
REதமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் தனியாருக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மே 22 தேதி நடந்த பேரணியின் போது போலீஸ் அவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த தாக்குதல் காரணமாக, இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பல பேர் படு காயம் அடைந்து இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா அமர்வு முன்னிலையில் இன்று நடைபெற்றது. ஏற்கனவே இந்த வழக்கு இரண்டு முறை விசாரணைக்கு வந்த போதும், ஏன் இந்த வழக்கை, சிபிஐ விசாரிக்க கூடாது என்று நீதிபதிகள் கேட்டு இருந்தனர். இப்போதும் அதே கேள்வியை அவர்கள் கேட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close