fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு…! மக்கள் அதிர்ச்சி!

Pondy former minister dead due to corona

புதுச்சேரி:

புதுச்சேரியில் முன்னாள் அமைச்சர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கொரோனா வைரஸால் பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், புதுச்சேரி மாநிலம் பங்கூரில் வசித்து வந்த  முன்னாள் அமைச்சர் ஏழுமலைக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்  ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து இவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close