விருதுநகர் மாவட்டத்தில் 9 நாட்டு வெடிகுண்டுகளுடன் ஒருவர் கைது!
விருதுநகர் மாவட்டம் முழுவதும் குற்ற செயல்கள் மற்றும் சட்ட விரோத செயல்களை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பாளர் ராஜராஜன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த குருவேந்திரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது அவரை மடக்கி பிடித்த அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது அவரிடம் 9 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது வீட்டில் ஒன்றரை கிலோ மான்கறி, 3 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் டார்ச் விளக்குகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து சேத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கடந்த மாதம் இதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் 6 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.