fbpx
REவிவசாயம்

சோற்று கற்றாழை எப்படி சாகுபடி செய்வது ?

How to cultivate aloe vera ?

கற்றாழை நம்மில் பெரும்பாலானோரால் உபயோகப் படுத்தப்படும் ஒன்று. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. இதன் மடல் மற்றும் வேர் மிகுந்த மருத்துவ பயன் உடையது.

மணல் தவிர்த்து எல்லா வகையான மண்ணிலும் கற்றாழை சாகுபடி செய்யலாம். இது ஆற்றங்கரையிலும்,தோட்டங்களிலும்,சதுப்பு நிலங்களிலும் வளர்கின்றன. கற்றாழை செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும். நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது ஏக்கருக்கு பத்து டன் தொழு உரம் இட்டு,சமன் செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சிறிய பாத்திகளை அமைக்கவேண்டும். செடிகள் நட்ட ஒரு மாதத்திலையே முதல் களை எடுத்து சுற்றி மண் அணைக்க வேண்டும்.

தாய் செடியிலிருந்து ஒன்று அல்லது இரண்டு மாத வயதுடைய கன்றுகளை பிரித்து பயன்படுத்த வேண்டும். ஒரே அளவிலான தேர்தெடுத்து நடுவது மிகவும் முக்கியம். அப்பொழுது தான் செடிகள் சீராக வளரும்.பின்னர் ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரும்.

ஒரு ஏக்கரில் இருந்து சுமார் 15 டன் கற்றாழை மகசூலாக கிடைக்கும். நடவு நட்ட காலத்திலிருந்து சுமார் 7-8 மாதங்களில் மகசூல் கிடைக்கும். இலையில் அதிக நீர் உள்ளதால்,அறுவடை செய்த உடனையே இலைகளை பக்குவப்படுத்தி வைக்க வேண்டும். கற்றாழை செடியில் நோய்கள்,பூச்சிகள் தாக்குவதில்லை.

கற்றாழையின் மொத்த பயிர் காலத்தில்  ஐந்து அல்லது ஆறு முறை நீர்ப்பாசனம் செய்வது போதுமானது. செடிகள் நன்றாக வளர்வதற்கு செடிக்குச் செடி மூன்று அடி இடைவெளி விட்டு பயிரிட வேண்டும். கற்றாழையில் நிறைய வகைகள் இருக்கின்றது. இவற்றுள் குர்குவா கற்றாழை அதிக அளவில் இந்தியாவில் பயிர் செய்யப்படுகிறது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close