நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலே தனது பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார்.!!
கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலே தனது பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார்.
கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்திருந்தது.
அதேபோல், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் அனைத்து எம்எல்ஏக்களும் பதவியேற்றுக் கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கேற்ப இன்று காலை 10 மணிக்கு கர்நாடக சட்டமன்றம் கூடியது. காங்கிரஸ், பாஜக, மஜத கட்சி எம்எல்ஏக்களை தற்காலிக சபாநாயகர் கே.ஜி.போபையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக சட்டசபையில் எடியூரப்பா கூறினார்.
சட்டசபையில் பேசிய எடியூரப்பா, தேர்தலில் 113 இடங்களில் வெற்றி பெற்றிருந்தால், இந்த நிலை வந்திருக்காது.
லோக்சபா தேர்தலில் 28 தொகுதிகளையும் வெல்வோம். அடுத்த சட்டசபை தேர்தலில் 150 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும் எனக்கூறி, பதவியில் இருந்து விலகுவதாகவும், ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.