

மாணவர்களின் உயிருடன் விளையாடுவதை தவிர்த்துவிட்டு 10 ஆம் வகுப்புத் பொதுத்தேர்வினை தள்ளி வைக்க வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி 10 வகுப்புத் தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதில் ஆரம்பத்தில் இருந்து அலட்சியத்துடன், முன்னுக்குப் பின் முரணான நடந்துகொள்வதைப் போலவே, மாணவர்களின் நலனிலும் அ.தி.மு.க அரசு அலட்சியத்துடன் இருக்கின்றது என கூறியுள்ளார்.
மேலும் 10 ஆம் வகுப்பு தேர்வு அறிவிப்பால் அனைத்து பெற்றோர்களும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே மாணவர்களின் உயிருடன் விளையாடும் மனப்போக்கை நிறுத்துங்கள். பொதுத்தேர்வை தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்த வலியுறுத்தவேண்டும் எனவும் கூறியுள்ளார்.















