fbpx
RETamil Newsதமிழ்நாடு

கரூரில் 13 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா!

Corona for person after 13 days in Karur

கரூர் மாவட்டத்தில் ஒரே ஒருவர் மட்டுமே கொரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளாகி இருந்தார். அவரும் நலம் பெற்று வீடு திரும்பிவிட்டார். இதனால் கரூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து 14 நாட்களுக்கு மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டம் சிவப்பு சாயத்தில் இருந்து மஞ்சள் சாயத்திற்கும் மாற்றப்படும்.

இந்நிலையில் கடந்த 13 நாட்களாக அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை.

இதனால் கரூர் மாவட்டம் சிவப்பில் இருந்து மஞ்சள் மாவட்டத்திற்கு மாறும் சூழ்நிலையில், தற்போது ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து  கரூரில் உள்ள மக்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளாகியுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் 42 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் படிப்படியாக அவர்கள் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

சென்னை ராயபுரத்தில் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்த கரூரை சேர்ந்த ஒரு இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அவர் இன்று காலை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்பு அவர் வசித்த அந்த காலனியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு , தற்போது அந்த  இடம் அடைக்கப்பட்டுள்ளது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close