fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

சென்னையில் இன்று முதல் 3 நாட்கள் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரசாரம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் மட்டும் இன்று முதல் 3 நாட்களுக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளில் வருகிற ஏபிரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதே போன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளிலும் அன்றய தினமே இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக , பாமக , தேமுதிக , தாமாக போன்ற கட்சியினர் கூட்டணி அமைத்து வருகின்ற தேர்தலை சந்திக்க உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக மற்றும் கூட்டணி காட்சிகளை ஆதரித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாலரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த 22-ம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விவரத்தை அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ளது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதாவது 25.3.19 முதல் புதன்கிழமை வரை சென்னையில் மட்டும் 3 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி ;

வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜுக்கு ஆதரவாக இன்று மாலை எடப்பாடி பழனி சாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். திருவேற்றுயூர், எண்ணூர், மணலி , பெரம்பூர் போன்ற தொகுதிகளிலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

தென் சென்னை , மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி;

நாளை அதாவது 26.3.19 ஆம் தேதி தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராணா டாக்டர் .ஜெயவர்த்தன , மற்றும் காஞ்சிபுர நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரான மரகதம் குமரவேல் ஆகியோரை ஆதரித்தும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேச உள்ளார்.

காஞ்சிபுரம், ஸ்ரீபெரம்பத்தூர் நாடாளுமன்ற தொகுதி ;

ஸ்ரீபெரம்பத்தூர்,திருவள்ளூர் போன்ற நாடாளுமன்ற தொகுதி கூட்டணி மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்தும் பழனிச்சாமி அவர்கள் பேசவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close