fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் 555 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி !

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 555 புதிய பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு தமிழகத்தில் புதிதாக 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கடந்த ஆண்டு ஜூலையில் 515 பேருந்துகளும், அக்டோபரில் 471 பேருந்துகளும் தொடங்கி வைக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது 401 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 555 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

புதிய பேருந்துகளில் அகலப்படுத்தப்பட்ட படிக்கட்டுகள், ஒலிப்பெருக்கி வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு இடவசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு 56 பேருந்துகள், விழுப்புரத்திற்கு 82 பேருந்துகள் மற்றும் சேலத்திற்கு 112 பேருந்துகள், குத்துக்கோணம் 102, கோவை 140, மதுரை 63 பேருந்துகள் என மொத்தம் 555 பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டது.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close