fbpx
RETamil Newsதமிழ்நாடு

’பவர்ஸ்டார்’ ஸ்ரீனிவாசன் மீது பணமோசடி புகாரில் சென்னை காவல் துறை வழக்கு பதிவு

Chennai Police filed a case against 'Powerstar' Srinivasan for cheating

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக தயாநிதி என்பவர் ’பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த தயாநிதி என்பவர், நடிகர் ஸ்ரீனிவாசன் மீது மோசடி புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதில், சினிமா வாய்ப்பு தேடி அலைந்த போது, படங்களில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக நடிகர் ஸ்ரீனிவாசன் தன்னிடமிருந்து ரூ. 4 லட்சம் பெற்றுக்கொண்டார்.ஆனால் இதுவரை சினிமா வாய்ப்பு வாங்கி தரவில்லை. பணத்தை கேட்டு அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

இதை தொடர்ந்து போலீசார் தகுந்த நடவடிக்கை எடுத்து தனது பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறு தயாநிதி புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close