fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

சென்னையில் பேருந்து வசதி வேண்டும் என்பவரா..? போன் நம்பரை வெளியிட்ட போக்குவரத்து கழகம்

Chennai bus transport announcement

சென்னை: பணியாளர்களுக்கு பேருந்து வசதி வேண்டும் என்பவர்கள் அணுகலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்வின் அடிப்படையில் அரசு பணியாளர்கள் 50% பேர் வேலைக்கு வர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி மே 18 முதல் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

தனியார் நிறுவனங்களும் இயங்குகின்றன. அலுவலகங்கள் இயங்கினாலும் பணியாற்றும் ஊழியர்கள் சென்று வர ரயில் மற்றும் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது புகாராகும்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பேருந்து சேவை தேவைபடும் பட்சத்தில் தங்களை அணுகலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி 9445030523 எண்ணிலும், edp.mtc@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அணுகலாம் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close