fbpx
RETamil Newsதமிழ்நாடு

சிலை கடத்தலில் பாஜக தலைவர்களுக்கு தொடர்பு உண்டு- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாலகிருஷ்ணன்

BJP leaders involved in the theft of statues said by balakrishnan

சிலை கடத்தலில் பாஜக தலைவர்கள் சிலருக்கு தொடர்பு உண்டு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை கீழக்கரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாலகிருஷ்ணன் சென்னை-சேலம் இடையே அமைந்துள்ள எட்டு வழிச்சாலை தேவையற்றது என தெரிவித்தார்.

பசுமைவழிச் சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் இருந்து சேலம் நோக்கி அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி அன்று ” என் நிலம் என் உரிமை ” என்ற பெயரில் நடை பயணம் மேற்கொள்ள இருப்பதாக பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

சிலை கடத்தலில் சில பாஜக தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் தெரிவித்த பாலகிருஷ்ணன் சிலை கடத்தல் விவகாரத்தில் பொன்மாணிக்கவேல் தலைமையிலேயே அவர் விருப்பப்பட்ட அதிகாரிகளை வைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்

Related Articles

Back to top button
Close
Close