fbpx
RETamil Newsஇந்தியாவாகனங்கள்

ஏப்ரல் மாத வாகன விற்பனை பூஜ்ஜியம் – அசோக் லேலண்ட் அறிவிப்பு !

April Sales Zero - Ashok Leyland Announces!

வர்த்தக வாகன முன்னணி நிறுவனமான அசோக் லேலண்ட் தேசிய அளவிலான ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் எந்த யூனிட்டுகளையும் விற்கவில்லை என்று அறிவித்துள்ளது.

இது குறித்து அசோக் லேலண்டின் இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான விபின் சோந்தி கூறுகையில், ஏப்ரல் 2019 இல் இந்நிறுவனம் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளில் மொத்தம் 13,626 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தேசிய அளவிலான ஊரடங்கு காரணமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றின் உற்பத்தி நடவடிக்கைகளை சுமூகமாக மேற்கொள்வது சிரமமாக உள்ளது. எனவே 2020 ஆம் ஆண்டிற்கான ஏப்ரல் மாதத்தில் உற்பத்தி மற்றும் விற்பனை பூஜ்ஜியமாக உள்ளது.

அசோக் லேலண்ட் நிறுவனம், COVID-19 தொற்றுநோய் தொடர்பான இந்திய அரசின் கடுமையான ஊரடங்கு உத்தரவுகளைப் பின்பற்றுவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதி அளித்த பின்னர் நடவடிக்கைகளைத் தொடங்குவதாகவும், அதன்படி அறிக்கை அளிப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close