fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 19 பொருட்களுக்கு வரி உயர்வு- மத்திய அரசு அறிவிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால், பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் உள்ளிட்ட பொருட்களின் மீதான இறக்குமதி வரி 10 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கம்ப்ரஸர் சுங்கவரி 7.5 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்பீக்கருக்கு 10 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. காலனி, கார் டயர் ஆகியவற்றின் வரி 5 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

வைரம், விலை மதிப்பற்ற நகைக்கற்கள், இறக்குமதி செய்யப்படும் ஆபரணங்கள் உள்ளிட்டவையின் விலை 5 முதல் 10 சதவிகிதமாக உயர வாய்ப்புள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள், சிங்க், ஷவர் மற்றும் சமையல் அறையில் பயன்படுத்தும் மேஜை, அலுவலக எழுதுபொருள், வளையல், சூட்கேஸ், சமையல் சாதனங்கள் மற்றும் பிற வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருட்களின் சுங்க வரி 10 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. விமான எரிபொருள் இறக்குமதி 5 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது.

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. 19 பொருட்கள் மீதான சுங்க வரி உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close