fbpx
RETamil News

மோடி அரசு முடிவுக்கு வரும் நாளே மக்களுக்கு உண்மையான தீபாவளி- சந்திரபாபு நாயுடு

மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு முடிவுக்கு வரும் நாளே உண்மையான தீபாவளி என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறி உள்ளார்.

ஆந்திராவுக்கு மோடி உறுதி அளித்தபடி சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்ததால், பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகி பாஜக அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார். இதற்காக அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாயாவதி, கெஜ்ரிவால், சரத்யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார்.

தீபாவளி பண்டிகையையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிக மோசமாக செயல்படுகிறது. ஆந்திராவில் சமீபத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புக்கு ஒரு பைசா கூட நிதி உதவி செய்யாமல் மனித நேயமற்ற தன்மையுடன் இருக்கிறது. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது. புயலால் பாதித்த மக்களுக்கு நாங்கள் உதவி செய்தோம்.

தற்போது கொண்டாடப்படுவது தீபாவளி அல்ல. மோசமாக ஆட்சியை நடத்தும் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு முடிவுக்கு வரும் நாளே உண்மையான தீபாவளி. அந்த தினத்தை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close