மின்னணு குடும்ப அட்டை பதிவிற்கு பிறகே பொங்கல் பரிசு வழங்கப்படும் – தமிழக அரசு

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ. 1000 இரண்டையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒன்றாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் 7ம் தேதி முதல் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட இருக்கிறது.
குறிப்பாக 1000 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை மின்னணு குடும்ப அட்டையில் பதிவு செய்த பிறகே வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
கூட நெரிசலை தவிர்க்கும் விதமாக தெரு வாரியாக குடும்ப அட்டை எண்களில் அடிப்படையில் பரிசை தர வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம் பரிசு விநியோக அட்டவணையை தயாரித்து ரேஷன் கடைகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
முடிந்தவரை, 1000 ரூபாயை இரண்டு 500 ரூபாய் தாள்களாக வெளிப்படையாக வழங்க வேண்டும், பணத்தை உரையில் அடைத்து தரக்கூடாது என்று தமிழக அரசு ரேஷன் கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பொங்கல் பரிசு தொகை வழங்குவதில் ஏதேனும் முறைகேடு நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இன்று தலைமை செயலகத்தில் இருந்தப்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதனை தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில் இதுகுறித்து அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்படும் போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் இதுகுறித்த புகார்களுக்காக கட்டுப்பாட்டு அறை வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.















