fbpx
RETamil Newsஅரசியல்

மக்கள் நல இயக்கம்” எனும் அமைப்பை தொடங்கினார் நடிகர் விஷால்!

சமீபத்தில் நடிகர் விஷால் நடித்து வெளிவந்த “இரும்புத்திரை” திரைப்படத்தின் 100-வது நாள் விழாவையும், விஷாலின் பிறந்த நாளையும் கலைவாணர் அரங்கத்தில் இன்று கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் மித்ரன், நடிகை சமந்தா, அர்ஜுன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து நடிகர் விஷால் ‘மக்கள் நல இயக்கம்’ எனும் பெயரில் ஒரு அமைப்பை தொடங்கினார்.

மக்கள் நல இயக்கத்தின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். கொடியின் இடது புறமாக அன்னை தெரசாவின் படமும், வலது புறமாக மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் படமும் இடம்பெற்றுள்ளது.

நடுவில் விஷாலின் படமும் இருந்தது. இதனுடன் விவேகம், வித்தியாசம், விடாமுயற்சி, அணி சேர்வோம், அன்பை விதைப்போம் என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து பேசிய விஷால், திருப்பரங்குன்றம் தேர்தல் வரப்போகிறது. அது நம்ம மண்ணு. நல்லது செய்ய நினைக்கும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் எனக் கூறினார்.

“அப்துல்கலாமை பார்க்கும் போது அறிவு, அன்னை தெரசாவை பார்க்கும் போது அன்பு ஞாபகத்தில் வரும்.

அதேபோல் என்னை கண்ணாடியில் பார்க்கும்போது துணிவு ஞாபகத்திற்கு வரும். இது அரசியலை நோக்கி செல்லும் இயக்கமல்ல.

அணியாய் சேர்ந்து அன்பை விதைக்கவே இந்த இயக்கம். அரசியல் என்பது மக்கள் பிரச்னையை தீர்ப்பதுதான்.

ஆனால் அது தற்போது ஒரு தொழிலாக மாறிவிட்டது. நடிகனாக சம்பாதித்துவிட்டு குடும்பத்துடன் இருக்க முடியாது.

வீதியில் நடக்கும் விசயங்களை பார்த்துவிட்டு சும்மா இருக்க முடியாது. அப்படி இருந்தால் பிணத்திற்கு சமம்” என்று கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close