fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

நீரவ் மோடிக்கு சொந்தமான 56 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்

நீரவ்மோடி மும்பையை சேர்ந்தவர். இவர் ஒரு வைர வியாபாரி. இவரும் இவரது உறவினர் மெஹுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய், பண மோசடி செய்து வெளிநாடு தப்பி ஓடி விட்டார். இந்த வழக்கை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கதுறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் நீரவ் மோடியை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, அமலாக்க துறை பலமுறை, ‘நோட்டீஸ்’ அனுப்பியும், ஆஜராகவில்லை. இவரை கைது செய்ய, ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீசார், நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் துபாயில் நீரவ் மோடி மற்றும் அவரது நிறுவனத்திற்கு சொந்தமான 56 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 11 சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. கடந்த மாதம், நீரவ் மோடி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான நியூயார்க்கிலுள்ள 2 வீடுகள் உள்பட மொத்தம் 637 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

Related Articles

Back to top button
Close
Close