Others

செங்குன்றம்—கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அழிப்பு…

ஆவடி காவல் ஆணையரகத்தில் 906.654 கிலோ கஞ்சா, 3820 போதை மாத்திரைகள், 10 கஞ்சா சாக்லேட் மற்றும் 2685 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் எரித்து அழிப்பு     செங்குன்றம், நவம்பர் 07:  ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை அழிக்க, ஆவடி மாநகர காவல் ஆணையாளர் டி.செந்தில்குமார் உத்தரவின் படி ஆவடி மாநகர காவல் இணை ஆணையாளர் டாக்டர். ஆர்.சிவகுமார், ஆவடி காவல் மாவட்ட காவல் துணை ஆணையாளர் வி.வினோத் சாந்தாராம் மற்றும் தடய அறிவியல் உதவி இயக்குநர் விஜயலட்சுமி ஆகியோர்கள் கொண்ட போதைபொருள்அழிப்பதற்கானகுழுஅமைக்கப்பட்டது.இந்நிலையில்ஆவடிகாவல்ஆணையரகத்திற்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுகளில் 190 வழக்குகளில் கைப்பற்றப்பட்டுள்ள சுமார் 906.654 கிலோ கஞ்சா, சுமார் 3820 போதை மாத்திரைகள், 10 கஞ்சா சாக்லேட் மற்றும் சுமார் 2685 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் உள்ளிட்டவை நீதிமன்றத்தின் மூலம் அழிப்பதற்கான ஆணை பெறப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கம் என்ற இடத்தில் உள்ள G.J. Multiclave India Pvt. Limited என்ற நிறுவனத்தில் உள்ள Insulator-ல் ஆவடி மாநகர காவல் இணை ஆணையாளர் டாக்டர் ஆர்.சிவகுமார் கொண்ட மேற்படி குழுவினர் ஆவடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆணையாளர் கலியசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் எரித்து அழிக்கப்பட்டது.

 

Related Articles

Back to top button
Close
Close