திமுக ஆட்சி காலத்தில் ஊழல் ஊழல்—நிர்மல் குமார்பேட்டி..
பெரியார் பெயரை வைத்தே ஊழல் செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு கூச்ச நாச்சமே இருக்காது. நாங்க தான் கட்டினோம், திறந்து வைத்தோம், நாங்க தான் புத்தகம் வாங்கினோம் என்று சொன்னார்கள். புத்தகம் எப்படி வாங்கி இருக்கிறீர்கள் என்று பார்த்தோம். மதுரையில் கருணாநிதி நூலகம்இருக்கிறது.மதுரைக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்? அவர் பெயரில் எதற்கு நூலகம் கட்டி உள்ளார்கள்? மதுரையை சார்ந்த மண்ணின் மைந்தர்களுக்கு அவர்களுடைய பெயரை வைக்க வேண்டும். பெயர் வைப்பதற்காகவே ஒரு கட்டடம் கட்டினார்கள்.நூலகத்தைக் கட்டி புத்தகத்தை வாங்கி போட்டு சுற்றி இருப்பவர்களுக்கு கமிஷன் வாங்குவதற்கு தான் கட்டுகின்றனர். இன்றைக்கு புத்தகம் ஆதாரமாக கிடைத்து விட்டது. அதனால் சொல்கிறீர்கள். இது இல்லாமல் எவ்வளவோ இருக்கிறது.மகேஷ் வழக்கில் முதலில் நான்கு பேர் புகார் செய்ததால் இன்று 100க்கும் மேற்பட்டோர் புகார் அளித்து இருக்கின்றனர். புத்தகம் ஆதாரமாக இருக்கிறது இன்றைக்கு மாட்டி விட்டது. எங்கு எல்லாம் ஆதாரம் இருக்கிறதோ அந்த துறை சார்பாக விசாரித்துக் கொண்டிருக்கின்றனர்.எல்லாஇடத்திலும்ஊழல்இருக்கிறது.இவர்கள்ஊழலைதவிர்த்துவேறுஎதுவும்செய்யவில்லை.பெரியார் பெயரில் நூலகம் திறந்து விட்டு ஊழல்செய்துஇருக்கிறார்கள். மதுரையில் உள்ள கருணாநிதி நூலகத்திலும் எடுத்துப் பார்த்தால் இப்படித்தான் இருக்கும். பெயரை மட்டும் வைத்துவிட்டு உள்ளே எல்லாம் பண்ணிக் கொண்டிருப்பார்கள்.சிறைத் துறையில் நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறோம். நாங்கள் நிறைய சீர் அமைப்பு பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். எந்தத் தவறும் நடக்காத வகையில் எல்லாம் சீரமைக்கப்பட்டு இருக்கிறது. எந்தத் தவறு நடக்காத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.சப் சிறையில் எல்லாம் நிறைய வன்முறை இருக்கிறது. இரண்டு மூன்று பேர் இருக்கும் சப் சிறைகள் எல்லாவற்றையும் மூடிக்கொண்டு வருகிறோம். அதையெல்லாம் மத்திய, மாவட்ட சிறைகளுக்கு மாற்றிக் கொண்டு இருக்கிறோம். இவ்வாறு நிர்மல் குமார் கூறினார்.