Others

வன்னியரசு வீடியோ எடுத்து ரீல்ஸ் –வனவிலங்கு அதிர்ச்சி…?

நீலகிரி மாவட்டம் முதுமலை பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த பத்தாம் தேதி சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு வருகை தந்திருந்தார். அவர், வனத்துறை ஊழியர்களுடன் வனப்பகுதிகளுக்குள் சென்று இருந்தார். அப்போதுஅங்கு சுற்றித் திரிந்தபுலி,யானைஉள்ளிட்டவனவிலங்குகளை ஆபத்தை உணராமல் ரோந்து வாகனத்திலிருந்துஇறங்கிவிரட்டித்தொந்தரவு செய்துள்ளார். அதை வீடியோவாகப் பதிவு செய்து,’ரீல்ஸ்’ஆகவும்வெளியிட்டுள்ளனர்.பாதுகாக்கப்பட்ட புலிகள் காப்பகத்திற்குள் வனவிலங்குகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதோடு, அதனை விளம்பரப்படுத்தும் விதமாக இணையத்தில் பதிவிட்டுள்ளது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுசாதாரண பொதுமக்களோ அல்லது சுற்றுலாப் பயணிகளோ வனப்பகுதியில் விதிகளை மீறினால் உடனடியாக அபராதம் விதித்து சட்ட நடவடிக்கை எடுக்கும் வனத்துறை அதிகாரிகள், அமைச்சர் வன்னியரசின் இந்தச் செயலுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்ற நிலையில், அமைச்சரே விதிகளை மீறி, வனவிலங்குகளை தொந்தரவு செய்து, அதை வீடியோவாக பதிவு செய்த விவகாரத்தில், வனத்துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.வன விலங்குகளுக்கு அச்சுறுத்தல் செய்த அமைச்சர் வன்னியரசு!வன்னியரசு

Related Articles

Back to top button
Close
Close