ஜிஎஸ்டி என்ற பெயரே கெட்டவார்த்தையாக மாறிவிட்டது. : ப.சிதம்பரம் பொளேர்!!!
டில்லி:
இந்தியா முழுவதும் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி செயல் படுத்தப்பட்டது. இன்றுடன் ஓராண்டு நிறைவடைவதை மத்திய அரசு கொண்டாடி வருகிறது. ஜிஎஸ்டி.யால் நாட்டில் வேலை வாய்ப்பு சீர் குலைந்துள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.
இது குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், ஜிஎஸ்டியின் வடிவம், கட்டமைப்பு முறை, வரி விதிப்பு முறை மற்றும் அமல்படுத்தப்பட்ட விதம் ஆகியவற்றால் தொழிலதிபர்கள், வணிகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் சாமானிய மக்களிடையே ஜிஎஸ்டி என்ற வார்த்தை கெட்ட வார்த்தையாக மாறிப்போய் இருக்கிறது.
ஜிஎஸ்டி தங்களது வரிச் சுமையை அதிகரித்துள்ளது என சாதாரண மக்களும் உணர்கின்றனர். ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் ஒரு கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை பறித்துள்ளது,
‘ஜிஎஸ்டி.யால் வரி வசூல் செய்யும் அதிகாரிகள் தான் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சாதாரண தொழிலதிபர்கள், பொதுமக்களை மிரட்டும் மிகப்பலம் வாய்ந்த அதிகாரம் அவர்களுக்கு கிடைத்துள்ளது.
தலைமை பொருளாதார ஆலோசகரின் கருத்துக்கள் ஜிஎஸ்டி மசோதாவில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தற்போது இருப்பது உண்மையான ஜிஎஸ்டியே கிடையாது. மிக வித்தியாசமான ஒரு விலங்கினம் தான் நம்மிடம் உள்ளது என்று ப.சிதம்பரம் கூறினார்.