fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

தமிழகத்தில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு!

தமிழகத்தில் மக்களவை, சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 18-இல் மக்களவைக்கும், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-இல் தொடங்கியது.

வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமையுடன் (மார்ச் 26) நிறைவடைகிறது. திங்கள்கிழமை நிலவரப்படி மக்களவைத் தேர்தலில் போட்டியிட 562-க்கும் அதிகமான பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

அதில், 485 ஆண்களும், 75 பெண்களும் அடங்குவர். 2 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.
சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் போட்டியிட 221 வேட்புமனுக்கள் தாக்கல் ஆகியுள்ளன. 183 ஆண்களும், 38 பெண்களும் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 27-இல் நடைபெறுகிறது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வரும் 29-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை 3 மணியளவில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

அந்தந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகங்களில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் அனைத்தும்  மே 23-இல் எண்ணப்பட உள்ளன.

Related Articles

Back to top button
Close
Close