fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

பஸ் பாஸ் கட்டண உயர்வு பற்றி ஆலோசனை நடைபெறுகிறது.

சென்னை மாநகர பேருந்துகளில் பயன்படுத்தப்படும் பஸ் பாஸ்களின் கட்டணத்தை உயர்த்த ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகளில் வழங்கப்படும் மாதாந்திர பஸ் பாஸ்களின் கட்டணத்தை ரூ.1000 திலிருந்து ரூ.1300 ஆக உயர்த்த ஆலோசனை நடைபெறுவதாக செய்திகள் வந்துள்ளது.

ஜனவரி மாதம் தமிழக போக்குவரத்து பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. சென்னையில் வெள்ளை ,கருப்பு, பச்சை, நீல , டிஜிட்டல் என பல விதத்தில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டபிறகு சொகுசு பேருந்துகள் தான் அதிக அளவில் இயக்கப்பட்டது. சொகுசு பேருந்துகளில் கட்டணம் அதிகம் என்பதால் மக்கள் பேருந்துகளை தவிர்த்து, புறநகர் ரயில், ஷார் ஆட்டோ , ஓலா பயணத்திற்கு மாறின.

சென்னையில் 30% மக்கள் சொகுசு பேருந்துகளை தவிர்ப்பதால் , அதிக அளவில் சொகுசு பேருந்துகள் காலியாகவே செல்கின்றன. அதனால் போக்குவரத்து வருவாய் குறைய தொடங்கியுள்ளது.

மேலும் சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகளில் மாதாந்திர பஸ் பாஸ் வழங்கப்படுகின்றது. இதில் 50 ரூபாய் பாஸைவிட 1000 ரூபாய் பாஸில் தான் அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால்தான் சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகளில் வழங்கப்படும் மாதாந்திர பஸ் பாஸ்களின் கட்டணத்தை ரூ.1000 திலிருந்து ரூ.1300 ஆக உயர்த்த ஆலோசனை நடைபெறுவதாக செய்திகள் வந்துள்ளது.

ஆனால் இதுவரை பஸ் பாஸ் உயர்வு பற்றி அதிகாரப்பூர்வ எந்த தகவலும் வெளிவரவில்லை.

Related Articles

Back to top button
Close
Close