fbpx
RETamil Newsதமிழ்நாடு

நீலகிரியில் யானை வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு

Supreme Court ordered to remove the occupations in the elephant path in Nilgiris

நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள மசினகுடி கிராமத்தில் யானையின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் கட்டுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2011ம் ஆண்டு தடை விதித்தது.

மேலும் யானை வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதிகளிலிருந்து நில உரிமையாளர்கள் காலி செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவினை எதிர்த்து பாதிக்கப்பட்ட விடுதி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த மனுக்களுடன் நாடு முழுவதும் உள்ள யானை வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக்கோரி ரங்கராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவையும் இணைத்து உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது.

நான்கு வாரத்துக்கு முன்னர் ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் மதன் பி. லோகூர், தீபக் குப்தா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் நீலகிரி மாவட்டத்தில் சுமார் 400 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன என வாதிட்டார்.

இதனையடுத்து நீதிபதிகள் நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து எத்தனை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன?, அவற்றால் யானைக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? என மாவட்ட ஆட்சியர் நான்கு வார காலத்துக்குள் எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close