fbpx
RETamil Newsதமிழ்நாடு

விவசாயிகளை கைது செய்யும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது – சீமான் தாக்கு

காலில் விழும் விவசாயிகளை கைது செய்யும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட கூட்டத்தில் அரசுக்கு எதிராக பேசியதாக கொலை மிரட்டல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்காக ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜராகி சீமான் முன்ஜாமீன் பெற்றார்.

தினமும் ஓமலூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை நீதிபதி ரமேஷ் விதித்து முன்ஜாமீன் வழங்கினார்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான் சொகுசு பயணம் மேற்கொள்பவர்கள் குறித்து கவலைப்படும் அரசு விவசாயிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை என்றும், மக்களின் விருப்பம் இல்லாமல் விளைநிலங்களை எடுப்பது தவறு என்றும் கூறினார்.

மலேசியா,சீனா,பிரிட்டன் போன்ற நாடுகளில் சாலை போடும் பொழுது இது போன்ற விளைநிலங்களை எடுப்பது இல்லை என்றும் அதற்கு பதில் உயர்ந்த தூண்கள் அமைத்து அதன்மூலம் மூலம் சாலை அமைப்பதாகவும் அது போன்ற நாடுகளில் மலைக்காடுகளை அழிப்பதில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த நிலம் என்பது யாரும் கொடையாக கொடுத்ததில்லை என்றும், அது அவர்கள் முன்னோர்களால் அது பெறப்பட்டது என்றும், இந்த நிலங்களை உருவாக்க விவசாயிகள் பெரும் சிரமப்பட்டு இருக்கிறார்கள் என்றும், இதை விட்டு வெளியேறச்சொன்னால் விவசாயிகள் எங்கு செல்வார்கள் என அரசாங்கத்திற்கு கேள்வி எழுப்பினார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close