fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு – தனியார் குழந்தைகள் காப்பகத்தில் நடக்கும் கொடுமை!

திருவண்ணாமலை மாவட்டம் ரமணா நகர் அருகே இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு தனியார் குழந்தைகள் காப்பகத்தில் 15 பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ரமணா என்ற நகரில் பாபு என்பவருக்கு சொந்தமாக அருணை என்ற பெயரில் தனியார் ஒரு குழந்தைகள் காப்பகம் இயக்கப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது இந்த காப்பகத்தில் பெண் குழந்தைகளுக்கு ஆபாச படங்களைக்காட்டி பாலியல் தொந்தரவு செய்யப்பட்டு வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் ,காவல்துறை கண்காணிப்பாளர் சி.பி சக்கரவர்த்தி மற்றும் குழந்தைகள் நல அலுவலர்கள் ஆகியோர் அந்த அருணை குழந்தைகள் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடத்தப்பட்டது உறுதியானது.

இதனையடுத்து காப்பகத்தில் இருந்த 15 குழந்தைகளையும் அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு மாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. மேலும் அக்காப்பகத்தின் உரிமையாளர், பராமரிப்பாளர் வினோத், மற்றும் அக்காப்பகத்தின் ஊழியர்கள் போன்றோரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் போலீசார் அக்காப்பகத்தில் பொறுத்திவைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் உபகரணங்களையும் எடுத்து சென்றனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு காப்பகம் என்ற பெயரில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close