fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

சின்னத்திரை படப்பிடிப்புகள்…! 60 பேருடன் நடத்திக் கொள்ள முதல்வர் அனுமதி!

Serial shooting permitted by TN government

சென்னை:

சின்னத்திரை படப்பிடிப்பில் நாளை முதல் 60 பேர் பணியாற்றலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் சின்னத்திரை மற்றும் பெரிய திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளன. 4ம் கட்ட ஊரடங்கில் ஓரளவுக்கு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில் சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது.

படப்பிடிப்புகள் உள் அரங்குகளில் மட்டுமே நடைபெற வேண்டும்,  படப்பிடிப்பில் கலந்து கொள்வோர் அனைவரும் மாஸ்க் அணிந்து சானிடைசர் பயன்படுத்த வேண்டும், படப்பிடிப்பில் 20 பேர் மட்டுமே அதிகபட்சமாக கலந்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

20 பேரை வைத்து சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த முடியாது என்று கூறப்பட்டது. இந் நிலையில், சின்னத்திரை படப்பிடிப்பில் நாளை முதல் நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்கள் என 60 பேர் பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் படப்பிடிப்பு நடத்த மாநகராட்சி ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும். பிற மாவட்டங்களில் ஆட்சியரிடம் ஒருமுறை மட்டும் அனுமதி பெற்றுக் கொண்டால் போதும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close