fbpx
RETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

பேருந்துகளில் பயணிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியீடு!:தமிழக அரசு!

தமிழகத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு நீங்கலாக மற்ற மாவட்டங்களில் நாளை முதல் 50%  பேருந்துகள் இயக்கப்படும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, ஜூன் 1 முதல் பொதுப் போக்குவரத்தை நடைமுறைப்படுத்த மாநிலம் முழுவதும் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்காக பிரிக்கப்பட்ட 8 மண்டலங்கள் வருமாறு :

முதல் மண்டலம்: கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கரூர், சேலம், நாமக்கல்

இரண்டாவது மண்டலம்: தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி

மூன்றாவது மண்டலம்: விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி

நான்காவது மண்டலம்: நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை

ஐந்தாவது மண்டலம்: திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்

ஆறாவது மண்டலம்: தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி

ஏழாவது மண்டலம்: காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு

எட்டாவது மண்டலம்: சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி

ஏழாவது மற்றும் எட்டாவது மண்டலங்கள் தவிர மற்ற ஆறு மண்டலங்களிலும் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து இயங்குவது தொடர்பான  வழிகாட்டுதல்களை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது.

அதன்படி, மண்டலங்களுக்கு உள்ளே மட்டுமே பேருந்து இயக்கப்படும்.

அதன்படி, ஒரு மண்டலத்தில் இருந்து இன்னொரு மண்டலத்தின் எல்லை வரை பேருந்துகள் இயக்கப்படும்.

மண்டலம் விட்டு மண்டலங்களுக்கு பேருந்துகளில் பயணிக்க இ-பாஸ் அவசியம்.

மண்டலத்திற்குள் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், பேருந்து, ரயில் பயணங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை.

பேருந்துகளை இயக்குவதற்கு முன்பு ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து வர வேண்டும்.

மேலும் அவர்கள் முகக்கவசம், கையுறை உள்ளிட்டவை அணிந்திருக்க வேண்டும்.

அனைத்து பேருந்து நிலையம் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் நாள் ஒன்றுக்கு இருமுறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும். பேருந்துகளில் கிருமிநாசினி இருப்பதை உறுதி செய்யப்பட வேண்டும்.

மண்டலத்திற்குள் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை.

குளிர்சாதனப் பேருந்துகளில் ஏசி இருந்தால் அதன் பயன்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டும்.

பயணிகள் அனைவரும் பின் படிக்கட்டுகள் வழியாக ஏறி முன் படிக்கட்டு வழியாக இறங்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட அளவு பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும்.

பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம். பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து இருக்கிறார்களா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

மாதாந்திர பாஸ்களை ஊக்குவிக்க வழி வகை செய்ய வேண்டும்.

இவ்வாறு போக்குவரத்து துறை சார்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close