fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

சென்னையில் பெண்களின் ஆபாசப்படம் பகிர்ந்தவர்களின் லிஸ்ட் தயார் – கூடுதல் டி.ஜி.பி ரவி பேட்டி

சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள மீனாட்சி கல்லூரியில் ‘காவலன் ஆப் ‘ குறித்த விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் டி.ஜி.பி ரவி கலந்து கொண்டு காவலன் ஆப் ‘ குறித்த பல்வேறு விளக்கத்தையும் , முறையையும் மாணவர்களுக்கு கொடுத்தார்.

அப்போது அவர் கூறியதாவது ;

‘ காவலன் ஆப் சற்று சிரமமாக இருப்பதால் அதை கையாளவும் அதில் பதிவு செய்யவும் பிரச்சனையாக உள்ளது என்று பொதுமக்கள் கூறியுள்ளனர். இன்னும் சில நாட்களில் காவலன் ஆப் எளிய முறையில் மாற்றியமைத்து மக்கள் எளிய முறையில் கையாளும் வகையில் மாற்றியமைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக எந்த குற்றமும் நடைபெறாமல் இருந்தால் தான் , ஜீரோ கிரைம் நிலை உருவாகும். சிறார்களின் ஆபாச படங்களை பகிர்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எவ்வாறு குழந்தைகளின் ஆபாச படம் பார்த்த 30 நபர்களின் பெயர்களை சென்னை காவல்துறைக்கு அனுப்பி வைத்துதான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். படிக்கும் குழந்தைகள் தவறான வீடியோக்களை பாக்கக்கூடாது.அதனால் அவர்களின் கவனம் சிதறி தவறான வழியில் நடக்க வைக்கும் .

எனவே பெண்கள் ஆடை மீது குறை சொல்பவன் தவறானவன் , ஆடை என்பது அவர்களது சுதந்திரம். தவறாக நடக்கும் எவனாக இருந்தாலும் அவனை அடியுங்கள் ..காவல்துறை உங்களின் பாதுகாப்பையே விரும்புகிறது , உங்கள் பாதுகாப்பே முக்கியம்’ என்று அவர் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close