fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு!

சென்னை:

நாடு முழுவதும் 46 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 15 சுங்கச்சாவடிகளின் கட்டணம் 3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி வாகன ஓட்டிகள், குறைந்தது ரூ.5 முதல் 15 வரை அதிகமாக செலுத்த வேண்டிய பரிதாப சூழல் ஏற்பட்டு உள்ளது.

52 கிமீ க்குள் பயணிக்கும் கார், ஜீப், இலகு ரக வாகனங்களுக்கு ஒரு முறை சென்று வர ரூ.60 கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதே போல் இலகு ரக சரக்கு வாகனங்கள், சிற்றுந்து ஆகியவற்றுக்கு ரூ.95 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

பேருந்துகள் ரூ.195, கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் ரூ.305 செலுத்த வேண்டும்.

இந்த கட்டண உயர்வானது, தேசிய நெடுஞ்சாலை கட்டண விதி 2008 -இன்படி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும், கட்டண உயர்வு ஞாயிற்றுக்கிழமை (செப்.1) முதல் நடை முறைக்கு வரும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு தமிழக்ததில், நல்லூர், பாளையம், வைகுந்தம், எலியார்பத்தி, கொடைரோடு, மேட்டுப்பட்டி, விக்கிரவாண்டி, பொன்னம்பலப்பட்டி, நத்தக்கரை, புதூர்பாண்டியபுரம், திருமாந்துரை, மணவாசி, வாழவந்தான்கோட்டை, வீரசோழபுரம், விஜயமங்கலம் உள்பட 15 தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சவாடிகளில்nநடைமுறைக்கு வந்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close