fbpx
Others

இன்று நாடாளுமன்றத்தில் 4 சட்டங்கள் அறிமுகம் …..

Parliament lok sabha Amit shahநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் நீட் முறைகேடுவிவகாரம்,டெல்லிமாணவர்போராட்டத்தின்போது நடந்த தடியடி, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று 4 சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதன்படி தீர்ப்பாயம் சீரமைப்பு சட்டம், சுரங்கம் கனிம வளங்கள் திருத்த சட்டம், கேரளாவின் பெயரை கேரளம் என மாற்றும் சட்டம் மற்றும் கூட்டுறவு வளர்ச்சி தொடர்பான தேசிய சட்டம் ஆகிய சட்டங்கள் இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. கேரளா – கேரளம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கேரளாவின் பெயரை ‘கேரளா’ என்பதிலிருந்து ‘கேரளம்’ என அதிகாரப்பூர்வமாக மாற்றுவதற்கான கேரளா (பெயர் மாற்றம்) மசோதா 2026-ஐ இன்று மக்களவையில் அறிமுகப்படுத்த உள்ளார். மத்திய அமைச்சரவை கடந்தபிப்ரவரியில்இந்தமுன்மொழிவுக்குஒப்புதல்அளித்தது.இந்தமசோதாஅறிமுகப்படுத்தப்பட்டவுடன், மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளிலும், அவையில் கலந்துகொண்டு வாக்களிக்கும்உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தச்சட்டத்திற்கு ஆதரவளித்து பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படவேண்டும்.நாடாளுமன்றம்மசோதாவை நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றவுடன், அது சட்டமாகும்.உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்யவுள்ள மற்றொரு மசோதா, தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக (திருத்த) மசோதா, 2026, தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் (NCDC) அதிகார வரம்பை விரிவுபடுத்த முயல்கிறது. இந்த மசோதா வரைவின்படி, பெரும்பாலும் கூட்டுறவு சங்கங்கள் மூலமான திட்டங்களுக்கு நிதியளிப்பதற்குப் பதிலாக, இந்தக் கழகம் கூட்டுறவு மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள பரந்த அளவிலான அமைப்புகளுக்கும் நிதியளிக்க முடியும். முன்னதாக, நாடாளுமன்றத்தில் முக்கியமான சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதால்ஆகஸ்ட்10,11மற்றும்12ஆகியதேதிகளில்எம்.பி.க்கள்தவறாமல்நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் கொறடா சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close