fbpx
Others

பிரான்சிடமிருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா….

ரூ. 3.25 லட்சம் கோடிக்கு 114 ரஃபேல் விமான ஒப்பந்தம்: இந்திய பாதுகாப்பில்  புதிய அத்தியாயம் - india to buy france 114 rafale fighter jets 39 billion  dollar defence contract - Samayam Tamilபிரான்ஸ் அரசுக்கு சொந்தமான, ‘டசால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்திடம் இருந்து, ஏற்கனவே, ரபேல் போர் விமானங்களை நம் விமானப்படைக்காக மத்திய அரசு வாங்கி உள்ளது. மேலும், நம் கடற்படையும், விமானம் தாங்கி போர்க்கப்பல்களுக்காக, ‘ரபேல் – எம்’ ரக விமானங்களை வாங்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது.நம் விமானப்படையின் வலிமையை வலுப்படுத்த, பிரான்சிடம் இருந்து கூடுதலாக, 114 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான கோரிக்கை கடிதத்தை அனுப்பி இருந்தது. தற்போது 114 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான தனது விரிவான தொழில்நுட்ப மற்றும் வர்த்தக முன்மொழிவை பிரான்ஸ் இந்தியாவிடம் சமர்ப்பித்துள்ளது.இது, நாட்டின் மிகப்பெரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் திட்டங்களில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. 3.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய இந்த ஒப்பந்தம் குறித்து, தற்போது பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் பிரிவு மற்றும் இந்திய விமானப்படைஆகியவற்றால் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.இந்தியத் தொழில்துறையுடன் இணைந்து 94 ஜெட் விமானங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது இந்த ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். இந்த உற்பத்தித் திட்டத்தில் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன், முன்னணி பிரெஞ்சு பாதுகாப்பு நிறுவனங்களான MBDA, சப்ரன் மற்றும் தேல்ஸ் ஆகியவையும் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தத் திட்டம், டாடா, லார்சன் & டூப்ரோ மற்றும் பிற உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் போன்ற இந்திய நிறுவனங்களுக்கு கணிசமான வாய்ப்புகளை வழங்குவதோடு, இந்தியாவின் விண்வெளி உற்பத்திச்சூழலமைப்பைகுறிப்பிடத்தக்கஅளவில்மேம்படுத்தும்எனஎதிர்பார்க்கப்படுகிறது.இந்தத் திட்டத்தின் கீழ் தொழில்துறை பங்கேற்பதன் மூலம் ரூ. 1.6 லட்சம் கோடி மதிப்பிலான வணிகம் உருவாகக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Back to top button
Close
Close