fbpx
Tamil Newsவாகனங்கள்

புதிய ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உற்பத்தி இந்தியாவில் துவக்கம் !

புதிய பொலிவூட்டப்பட்ட ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது.

ஃபோர்டு எண்டெவர் தோற்றத்திலும், செயல்திறன் மிக்க எஞ்சின் ஆப்ஷன்களிலும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. மேலும், போட்டி அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி புதுப்பொலிவுடன் உற்பத்தி செய்யப்படுகிறது.

வரும் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்கு இடையிலான நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் சிறப்பம்சங்கள்:

1. தற்போது ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த நிலையில், புதிய மாடலில் 2.0 லிட்டர் ஈக்கோபுளூ டீசல் எஞ்சின் இடம்பெற இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த புதிய டீசல் எஞ்சின் இரண்டு விதமான திறன் கொண்டதாக கிடைக்கும்.

2. புதிய முப்பட்டை க்ரில் அமைப்பு, பொலிவு கூட்டப்பட்ட ஹெட்லைட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது.

3. ஒரு மாடல் 180 பிஎச்பி பவரையு்ம், 420 என்எம் டார்க் திறனையும் மற்றொரு மாடல் 212 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். இந்த டர்போ சார்ஜ்டு டீசல் எஞ்சினுடன் 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

4. புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் மேம்படுத்தப்பட்ட சிங்க் சாஃப்ட்வேருடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளையும் பயன்படுத்த முடியும்.

Related Articles

Back to top button
Close
Close