அரசு மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்திட நாம் தமிழர் கட்சியினர் புதுக்கோட்டையில் போராட்டம்
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டையின் மையப் பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு புதுக்கோட்டையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அரசு தலைமை மருத்துவமனை மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயற்சித்த போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனையடுத்து 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.