பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுநீர் துறையை எச்.ராஜாவுக்குத்தான் கொடுப்பார்கள்:டி டி வி தினகரனின் மரண கலாய்!
If BJP comes to power, the urine department will be given to H Raja: TTV Dinakaran smashed
பாஜக ஆட்சிக்கு வந்தால் எச்.ராஜாவுக்குத்தான் சிறுநீர் துறையை கொடுப்பார்கள் என அமமுகழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் எம்எல்ஏவுமான டி டி வி தினகரன் திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்,
நுண்ணீருக்கும் சிறுநீருக்கும் வித்தியாசம் தெரியாத ஹெச்.ராஜாவுக்கு சிறுநீர் துறையை கொடுப்பார்கள் போல,
இதுதான் இவர்களின் இன்றைய நிலை.
தமிழகத்தில் கழகங்களோடு கூட்டணி அமைத்து பதவிக்கு வந்ததை பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர்,இங்கே இருப்பவர்கள் சில பேருக்கு நாக்கில் சனி இருப்பதாக நான் சொல்லுவேன்.
பாஜக தலைவர் இருக்கும்போதே அவர்கள் நாக்கில் சனி விடமாட்டேன் என்கிறது.
இந்திய அளவில் தமிழகத்தில் தான். ஊழல் அதிகமாக உள்ளதாக பாஜக தலைவர் அமித்ஷா கூறியிருப்பது வேடிக்கையானது.
எடப்பாடி அரசை தாங்கிப் பிடிப்பது யார் என்று கேட்டால் சின்ன குழந்தை கூட சொல்லும்.
கடந்த வருடம் முடிய வேண்டிய ஆட்சி இன்னும் தொடருகிறது என்றால் யாரால், இந்த ஆட்சி தொடர உதவியாக இருந்துவிட்டு மக்கள் நம்பிக்கையில்லாத இந்த அரசை இன்றைக்கு ஊழல் ஆட்சி என பாஜக தலைவர் சொல்வது வெறும் கண் துடைப்புதான் என்றும் அவர் கூறினார்.