fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

பாகிஸ்தானில் இந்து பெண் நீதிபதியாக தேர்வுசெய்யப்பட்டார்!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள குவம்பர் சஹாதக்கோட் என்ற மாவட்டத்தை சேர்ந்தவர் சுமன் குமாரி. இவர் இந்து மதத்தை சேர்ந்தவர். தற்போது அவர் அம்மாவட்டத்தின் சிவில் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவ்வாறு ஒரு இந்து பெண் சிவில் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளது பாக்கிஸ்தான் வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும்.சிந்து மாகாணத்தில் ஹைதராபாத் நகரில் சட்ட பட்டப்படிப்பை முடித்து, கராச்சியில் உள்ள ஷாபிஸ்ட் என்ற பல்கலை கழகத்தில் முதுகலை சட்டம் பயின்று பட்டம் பெற்றார் சுமன் குமாரி.

இது குறித்து சுமன் குமரியின் தந்தை கூறியதாவது; ” எண்னுடைய மகள் , என் சொந்த மாவட்டத்திலேயே ஏழை மக்களுக்கு சட்ட உதவி செய்து தர வேண்டும் என்று விரும்பினேன். அவ்வாறே தற்போது நடந்துள்ளது.என் மகள் கடினமான மற்றும் சவாலான துறையை தான் தேர்வு செய்திருக்கிறார் என்பதை நான் அறிவேன். என்னினும் என் மகள் நீதி தவறாமல் நேர்மையுடன் செயல்படுவாள் என நம்பிக்கை வைத்துள்ளேன்” என அவர் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close