RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
வண்டலூர் பூங்காவில் தப்பியோடிய கழுதை புலி பிடிபட்டது
வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூண்டில் இருந்து தப்பி ஓடிய கழுதைப்புலி பிடிபட்டது.
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மைசூரிலிருந்து நான்கு கழுதைப்புலிகள் கொண்டுவரப்பட்டு கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கூண்டிலிருந்து கழுதைப்புலி ஒன்று தப்பி ஓடியது.
பூங்கா ஊழியர்கள் மற்றும் வனத்துறையினர் இனைந்து தப்பி ஓடிய கழுதை புலியைத் தேடி வந்தனர். கூண்டில் இருந்து தப்பி ஓடிய கழுதைப்புலி வண்டலூர் பூங்கா அல்லது அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கலாம் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இந்தநிலையில் பூங்காவிற்கு உள்ளேயே பதுங்கியிருந்த கழுதைப்புலியை பூங்கா ஊழியர்கள் மற்றும் வனத்துறையினர் பிடித்தனர்.