fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

நம்ப மாட்டீங்க…! தமிழகத்தில் இயல்பை விட அதிகமழையாம்…! வானிலை மையம் தகவல்!

Chennai weather centre report

சென்னை:

தமிழகத்தில் இயல்பை விட, 11 சதவீதம் கூடுதல் மழை பெய்து உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய கூறி உள்ளதாவது: கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், இன்று லேசான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புஉள்ளது.

சென்னையின் சில பகுதிகளில், லேசானது முதல், மிதமானது வரை மழை பெய்யும். 24 மணி நேரத்தில், புதுக்கோட்டை, 9, ஊத்துக்கோட்டை, கடையநல்லுார், 8, பண்ருட்டி, தியாகதுருகம், 7, பள்ளிப்பட்டு, 6; திருவாலங்காடு, அரிமளம், காவேரிப்பாக்கம், வளவனுார், 5, காஞ்சிபுரம், திருச்செங்கோடு, 4 செ.மீ., மழை பெய்துள்ளது.

தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல், கேரளா, லட்சத்தீவு, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். இந்த பகுதிகளுக்கு, நாளை மறுநாள் வரை மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை, ஜூன், 1 முதல் ஜூலை 7 வரை  தமிழகத்தில் இயல்பான அளவை விட, 11 சதவீதம் அதிக மழை பெய்து உள்ளது.

புதுச்சேரியில், 30 சதவீதம் மழை குறைந்துள்ளது.திருநெல்வேலி, 60, சென்னை, 49, கடலுார், 38, நாமக்கல், திருவள்ளூர், 25, துாத்துக்குடி மாவட்டங்களில், 36 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. கரூர், 247, பெரம்பலுார், 118, ராமநாதபுரம், 204, சிவகங்கை, 48, திருச்சி, 76, புதுக்கோட்டை, 104, திண்டுக்கல் மாவட்டங்களில், 78 சதவீதம் அதிக மழை பெய்துஉள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close