RETamil Newsதமிழ்நாடு
ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
நீலகிரி, கோவை, தேனி, உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் நீலகிரி,தேனி,கோவை, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசப்படும் என்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.